Trending Now
சபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் செல்வ வளம் தரும் படிபூஜை – தேவசம்போர்டு புது கட்டுப்பாடு

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜையை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் வேளைகளிலும் பக்தர்கள் 18ஆம் படி ஏறவும், சாமியை தரிசனம் செய்யவும், இரவு 8 மணிக்கு மேல் சன்னிதானத்தில் தங்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பதோடு சபரிமலை ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே பெரும்பாலான பக்தர்கள் படி பூஜை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2039ஆம் ஆண்டு வரையில் முன்பதிவு முடிந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Compare