Trending Now
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்!’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்!’ – அமித் ஷா வருகை குறித்து துரைமுருகன்

“ஜெயலலிதா இஸ் கமாண்டர் அண்ட் கமாண்டபுள் லீடர். அவரது நிர்வாகத் திறமையோடு எடப்பாடியை ஒப்பிடாதீர்கள்’’ என்கிறார், துரைமுருகன்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், காட்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், “ `தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தி.மு.க ஏற்கும்’ என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நலிந்த பிரிவினருக்கு இது போன்ற உதவியை அரசுதான் முன்வந்து செய்ய வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் இந்த அரசுக்குக் கவலையில்லை. அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்க்கட்சியாக இருக்கிற தி.மு.கழகத்தின் தலைவர் செய்திருக்கிறார் என்பதுதான் அரசியல் உலகில் விசித்திரம். 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கிடைப்பதற்கு முழு முயற்சி எடுத்ததும் தி.மு.க என்றால் மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Compare